பண்ருட்டி: காடாம்புலியூர் அரசு பள்ளியில் எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் ஆய்வு - குடிநீர் தொட்டியை உடனடியாக சீரமைக்க உத்தரவு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் பகுதியில் இயங்கி வரும் கண்ணுசாமி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி மாணவர்கள் பழுதடைந்த குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடிப்பதை கண்ட அவர், அருகில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் நீர்த்தேக்க தொட்டியும், குடிநீரும் சுகாதாரமான முறையில் இருக்க வேண்டும் என்றும் இவற்றை சீரமைக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.