பண்ருட்டி: நெல்லிக்குப்பம் பகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி அமைதி பேரணி, புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது
தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவையொட்டி கட்சி நிர்வாகிகள் தினமும் உணவளித்தும்,புகழஞ்சலி கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி இன்று கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியில் தேமுதிக சார்பில் அமைதிப் பேரணி மற்றும் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. கடலூர் நெல்லிக்குப்பம் ஆலைரோடு பகுதியில் அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் துவங்கிய பேரணி நெல்லிக்குப்பம் பேருந்து நிலையம் வந்தடைந்தது.