பண்ருட்டி: பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் அம்பேத்கர் சிலையை தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்ததையடுத்து பண்ருட்டி மார்கெட் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு.
பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் அம்பேத்கர் சிலையை தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்ததன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.அதன்படி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில் அந்தந்த பகுதிகளில் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதன்படி பண்ருட்டி மார்கெட் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.