பண்ருட்டி: திருவதிகை திரௌபதி அம்மன் கோவில் அருகே புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் இராஜேந்திரன் நேரில் ஆய்வு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சிக்குட்பட்ட திருவதிகை 13வது வார்டு திரௌபதி அம்மன் கோவில் அருகே நடைபெற்று வரும் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை நகர்மன்ற தலைவர் இராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஒப்பந்ததாரர்கள் ராஜா, சரவணன், நகர்மன்ற உறுப்பினர் சரண்யா ரகுபதி ஆகியோர் உடனிருந்தனர்.