பண்ருட்டி: மணலூரில் உள்ள செல்லியம்மன் கோவிலில் செடல் திருவிழா- பக்தர்கள் பறக்கும் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
கடலூர், விருத்தாசலம் அடுத்த மணலூர் செல்லியம்மன் என போற்றப்படும் வடபத்திர காளியம்மனுக்கு மாசி மக பெரு விழா மற்றும் சண்டியாக மகா பெருவிழா கடந்த 8ந் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியாக செடல் திருவிழாவில் அம்மனுக்கு பால் தயிர் இளநீர் பன்னீர் தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து மணிமுக்தாற்றில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். மேலும் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சக்தி கரகம், 108 பால்குடம், அக்னி சட்டி, 60 அடி அலகுகள், பறக்கும் காவடி எடுத்து வந்து நேர்த்திகடன் செலுத்தினர்.