பண்ருட்டி: திமுக ஆட்சியில் தமிழகமே போதைப்பொருள் கிடங்காக மாறியுள்ளதாக கூறி பஸ் நிலையம் முன்பு அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் தலைமையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தைப் போதைப்பொருள் கிடங்காக மாற்றியுள்ளதாகக் கூறி திமுக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்நிகழ்வில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். அதேபோல், நெல்லிக்குப்படும், மேல்பட்டாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.