ஆலத்தூர்: ஆம்னி பேருந்தில் பயணி நகை, பணம் மாயம்: காவல் நிலையத்தில் 4 மணி நேரம் பயணிகள் தவிப்பு!
சென்னையில் இருந்து மதுரை சென்ற ஆம்னி பேருந்தில் பயணி ஒருவர் பணம், நகை காணாமல் போனதாகக் கூறியதால், சக பயணிகள் 4 மணி நேரம் காவல் நிலையத்தில் அலைக்கழிக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், மதியம் பயணிகளை அனுப்பி வைத்தனர்.