இராமநாதபுரம்: இராமேஸ்வரம், உச்சிப்புளியில் குற்றவாளிகளின் வீடுகளில் எஸ்.பி. அதிரடி ஆய்வு!
ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத், இராமேஸ்வரம் மற்றும் உச்சிப்புளி பகுதிகளில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடாது என குற்றவாளிகளை எச்சரித்த அவர், சட்டம் ஒழுங்கு குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.