காட்பாடி: வேலூர்: கடத்தப்பட்ட 71 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது
வேலூர் மாவட்டம் பொன்னையில் 71 டன் ரேஷன் அரிசி கடத்திய இரண்டு லாரிகளை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராணிப்பேட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் தங்கமணி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.