இராமநாதபுரம்: ராமநாதபுரம்: சிறப்புக் குழந்தைகளுடன் உணவகத்தினர் குழந்தைகள் தினக் கொண்டாட்டம்
ராமநாதபுரத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மன வளர்ச்சி குன்றிய 40-க்கும் மேற்பட்ட சிறப்புக் குழந்தைகளுக்கு சீரக சம்பா பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது. உணவகத்தில் குழந்தைகளை வெங்காயம் நறுக்கச் செய்து, அவர்களுடன் இணைந்து உணவருந்தி ஊழியர்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.