நீட் தேர்வில் தமிழக அளவில் 1st Rank! | விழுப்புரம் மாணவருக்கு சவுமியா அன்புமணி எம்.எல்.ஏ. நேரில் வாழ்த்து! 🏆
நடப்பு கல்வியாண்டுக்கான நீட் (NEET) நுழைவுத்தேர்வில் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர் வேங்கடபதி வேலாயுதம் தமிழக அளவில் முதலிடமும், அகில இந்திய அளவில் 12-ஆம் இடமும் பிடித்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளார்.
இவர் விழுப்புரம் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் அஞ்சன் ராமச்சந்திரநாத் - டாக்டர் புனிதவதி தம்பதியரின் மகன் ஆவார்.
சாதனை படைத்த மாணவரை, விழுப்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பா.ம.க. சட்டமன்ற குழுத்தலைவர் சவுமியா அன்புமணி எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். உடன் மாவட்ட செயலாளர் பாலசக்தி, மாவட்ட தலைவர் தங்கஜோதி, ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளர் பழனிவேல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
🏷️ Hashtags (ஹேஷ்டேக்குகள்):
#NEETTopper #VillupuramNews #TN32News #SowmiyaAnbumani #PMK #NEET2026 #VillupuramTopper #TamilNaduNews