புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தல்: பெண் உட்பட 3 பேர் அதிரடி கைது!
விழுப்புரம் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் நடராஜன், சண்முகம் தலைமையிலான போலீசார் ஜி.ஆர்.பி. தெரு மற்றும் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த 3 பேரைச் சோதனையிட்டதில், அவர்களிடம் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் புதுச்சேரி வம்பாபேட்டைச் சேர்ந்த கிருஷ்ணசாமி (37), விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவைச் சேர்ந்த சரண்ராஜ் (38) மற்றும் அவரது மனைவி மீனா (34) என்பது தெரியவந்தது. புதுச்சேரியில் இருந்து கிருஷ்ணசாமி கடத்தி வந்த மதுபாட்டில்களை, விழுப்புரத்தில் விற்பனை செய்வதற்காகச் சரண்ராஜ் மற்றும் மீனாவிடம் வழங்கியபோது போலீசார் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.
800 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
#Villupuram #VillupuramNews #LiquorSmuggling #VillupuramPolice #News32 #TN32News #BreakingNews #CrimeNews #TamilNadu
Viluppuram, Viluppuram | Jul 26, 2026