கீழ்வேளூர்: நாகப்பட்டினம்: 40 கிலோ குட்கா பறிமுதல் - இருவர் கைது!
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வைத்திருந்த இருவரை கீழ்வேளூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 40 கிலோ குட்கா, 132 பாக்கெட் ஹான்ஸ் மற்றும் 28,000 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.