நாங்குநேரி: நெல்லை: மூலைகரைப்பட்டியில் காரில் கடத்தப்பட்ட 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், 2 பேர் கைது
நெல்லை மாவட்டம் மூலைகரைப்பட்டி நம்பியாறு - தாமிரபரணி இணைப்பு பாலம் அருகே, காரில் கடத்தப்பட்ட 1500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக டேவிட் மற்றும் ஜெயசீலன் ஆகிய இருவரை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.