திருப்பத்தூர்: பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என காமராஜர் நகர் பகுதியில் மாதர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
திருப்பத்தூர் நகராட்சி காமராஜர் நகர் பகுதியில் இன்று திருப்பத்தூர் மாவட்ட மாதர் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொறுப்பாளர் பாக்கியலட்சுமி, மாநில குழு உறுப்பினர் சங்கரி மற்றும் சிபிஎம் கட்சி தாலுக்கா காமராஜ், மாவட்ட குழு உறுப்பினர் காத்தவராயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.