காட்பாடி: வேலூர்: பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் நள்ளிரவில் பயங்கர வெடிப்பு - கிடங்கு தரைமட்டம்
வேலூர் மாவட்டம் அர்ஜுனாபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்டு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 50 கிலோ வெடிமருந்துகள் வெடித்து சிதறின. இதில் கட்டிடம் இடிந்து சேதமடைந்தது. சம்பவம் குறித்து மத்திய PESO அதிகாரிகள் மற்றும் தடய அறிவியல் துறையினர் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர்.