வாணியம்பாடி: வாணியம்பாடி அல்ஹுதா பள்ளி: 365 அறிவியல் மாதிரிகளுடன் அசத்திய மாணவர்கள்
வாணியம்பாடி அல்ஹுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில், 450 மாணவர்கள் பங்கேற்று 365 படைப்புகளைக் காட்சிப்படுத்தினர். சந்திரயான்-3, ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப மற்றும் வரலாற்று மாதிரிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன.