நாமக்கல்: நாமக்கல்லில் 13.87 ஏக்கர் கங்காணி குட்டை தூர்வாரும் பணி துவக்கம் - எம்.எல்.ஏ திலீப் உறுதி
நாமக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள 13.87 ஏக்கர் பரப்பளவு கொண்ட கங்காணி குட்டையை தூர்வாரும் பணி இன்று தொடங்கியது. எம்.எல்.ஏ திலீப், பணம் வாங்காமல் பிரச்சனைகளை நேரில் வந்து தீர்க்கப்போகிறார் என உறுதி தெரிவித்தார். மாநகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜியும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.