பண்ருட்டி: பேருந்து நிலையத்தில் திமுகவினர் நூதன முறையில் வடை சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
தமிழக அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரம் மூலம் வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசு அறிவித்த திட்டங்களான எய்ம்ஸ் மருத்துவமனை,கறுப்பு பணம் மீட்பு,பெட்ரோல் -டீசல் விலை குறைப்பு உள்ளிட்டவைகளை நிறைவேற்றாத வாயாலே வடை சுடும் மோடி அரசை வீட்டுக்கு அனுப்புவோம் எனக்கூறி திமுகவினர் பண்ருட்டி நகர பகுதியில் திமுக நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பபில் ஈடுபட்டனர்.