பண்ருட்டி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76வது பிறந்தநாள் விழாவையொட்டி திருமலைநகர் உள்ளிட்ட பகுதியில் அதிமுகவினர் கொண்டாடினர்
பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை மற்றும் அங்கு செட்டிப்பாளையம், திருமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் மறைந்த முன்னாள் முதல்வரின் ஜெயலலிதா அவர்களின் திருவுருவ படத்திற்கு அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கும் இனிப்புகள் வழங்கினர். அதனைத் தொடர்ந்து சுமார் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.