பண்ருட்டி: நான்குமுனை சந்திப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு
கடலூர் மாவட்டம் நெய்வேலி செவ்வாய் சந்தை ரவுண்டானாவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைக்க வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பேண்டு வாத்தியங்கள் முழங்க அதிமுக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் முன்னாள் நகர மன்ற தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.