பரமத்தி வேலூர்: பரமத்திவேலூர் பஞ்சமுக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடுகள்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஞ்சமுக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பஞ்சவர்ண அலங்காரம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.