பண்ருட்டி: காராமணிக்குப்பம் அருகே கார் திடீரென தீப்பற்றி எரிந்ததையடுத்து கார் உரிமையாளர் சேதமின்றி உயிர் தப்பினார்
கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து கலைவாணன் என்பவர் தனது காரை ஓட்டிக்கொண்டு சென்றபோது காராமணிக்குப்பம் அருகே கார் எதிர்பாராத விதமாக புகை வந்ததால் காரின் உரிமையாளர் காரை நிறுத்தி பார்ப்பதற்குள் காரில் தீ பரவ ஆரம்பித்தது. அதனைத்தொடர்ந்து உடனடியாக நெல்லிக்குப்பம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் மூலம் மேலும் தீ பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.