ஆண்டிப்பட்டி: ஆண்டிபட்டி டி.சுப்புலாபுரம் கந்தநாதர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்!
ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் கந்தநாதர் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் 6-ம் நாளான சூரசம்ஹாரம் நடைபெற்றது. 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கடும் விரதம் இருந்து தரிசனம் செய்தனர். நாளை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.