விருத்தாசலம்: வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் எனக்கூறி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியினர் பாலக்கரையில் பிரச்சாரம்
கடலூர் மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மணிவாசகனுக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர் கதிர்காமன் நூதனமான முறையில் விருத்தாசலம் கடைவீதி, பாலக்கரை பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது 'வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும், இல்லையெனில் ஆக்சிஜன் சிலிண்டரை கட்டிக்கொண்டு வாழ நேரிடும். எனவே இயற்கை வளங்களைக் காக்க வேண்டும்' எனக்கூறினார். மேலும், குடுவையை ஆக்சிஜன் சிலிண்டர் போல் சித்தரித்து அதனை முதுகில் கட்டிக்கொண்டு நூதனப் பிரச்சாரம் மேற்கொண்டார்.