ஆண்டிப்பட்டி: ஆண்டிப்பட்டியில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா: 300-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 300-க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்து முன்னணி சார்பில் 107 சிலைகள் கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் டிஎஸ்பி விஷ்ணு பிரியா தலைமையிலான காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.