திண்டுக்கல் கிழக்கு: திமுக தலைவர்கள் பற்றி முதல்வர் விஜய் பேசியது அவதூறு: திண்டுக்கலில் ஐ.பெரியசாமி கண்டனம்
சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் திமுக தலைவர்கள் குறித்து அவதூறாகப் பேசியதைக் கண்டித்து, திண்டுக்கலில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, முதல்வர் விஜய் அரசியல் புரிதல் இன்றி பேசுவதாகக் கடுமையாக விமர்சித்தார்.