செங்கல்பட்டு: அச்சிறுபாக்கம் - தொழுப்பேடு சாலையில் விபத்து அபாயம்: இரும்பு தடுப்புகளை மூடிய மண்
அச்சிறுபாக்கம் - தொழுப்பேடு நெடுஞ்சாலையில், சித்தேரி கரையில் இருந்த இரும்பு தடுப்புகள் மண் கொட்டப்பட்டதால் மூடப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.