பண்ருட்டி: முன்னாள் சென்னை மாநகராட்சி மேயர்.சைதை துரைசாமி மகன் மறைவையொட்டி அவரது இல்லத்தில் MLA வேல்முருகன் மலரஞ்சலி செலுத்தினார்
மனித நேயம் அறக்கட்டளை நிறுவனரும் முன்னாள் சென்னை மாநகராட்சி மேயருமான திரு.சைதை துரைசாமி அவர்களின் மகனும் திரைப்பட இயக்குனருமான திரு.வெற்றி துரைசாமி அவர்கள் சமீபத்தில் அகால மரணமடைந்தார். அதனையொட்டி அவரது இல்லத்திற்கு நேரில் சென்று திரு.வெற்றி துரைசாமி அவர்களின் திருவுருவப் படத்திறக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதோடு சைதை. துரைசாமி அவர்களிடம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன் என அக்கட்சியின் நிறுவனர் MLA வேல்முருகன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.