திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை ரயிலில் 11 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ஷாலிமர்–திருவனந்தபுரம் விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 11 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சேலத்தைச் சேர்ந்த பிரகாஷ், சக்திவேல் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.