இராமநாதபுரம்: நவம்பர் 13-க்குள் கரை திரும்ப மீனவர்களுக்கு எச்சரிக்கை: ராமநாதபுரம் மீன்வளத்துறை தகவல்
வங்கக்கடலில் நவம்பர் 13-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், ராமநாதபுரம் மீனவர்கள் நவம்பர் 12-ம் தேதி இரவுக்குள் கரை திரும்ப வேண்டும் என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க அனுமதி இல்லை.