ஆண்டிப்பட்டி: விநாயகர் சதுர்த்தி: ஆண்டிப்பட்டியில் கிடுகிடுவென உயர்ந்த வாழைத்தார்கள் விலை
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆண்டிப்பட்டி சந்தைப்பேட்டையில் வாழைத்தார்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. கற்பூரவள்ளி, நாட்டு ரகம் மற்றும் சக்கை ரக வாழைத்தார்கள் அதிக விலைக்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.