நாகப்பட்டினம்: சிக்கல் சிங்காரவேலவர் கோயில் கந்த சஷ்டி: கோலாகலமாக நடந்த திருத்தேரோட்டம்
நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் ஆலய கந்த சஷ்டி விழாவில் திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இன்று இரவு நடைபெறும் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி மற்றும் வியர்வை சிந்தும் அதிசய நிகழ்வுக்காக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.