திருப்பூர் தெற்கு: திருப்பூர்: ஐயப்ப பக்தர்கள் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து விரதம் தொடக்கம்!
கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று, திருப்பூரில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர். திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டு வந்து சரண கோஷங்களுடன் மாலை அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.