ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே கோர விபத்து: ஈச்சர் லாரி - தோஸ்த் வாகனம் நேருக்கு நேர் மோதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வெப்பாலம்பட்டி அருகே ஈச்சர் லாரியும் தோஸ்த் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் உட்பட 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.