கோவில்பட்டி: திட்டங்குளம் நீர்நிலை ஆக்கிரமிப்பு: கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் தர்ணா போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.