திருப்பத்தூர்: குடியிருப்புப் பகுதியில் தேங்கிய கழிவுநீர் - நோய்த்தொற்று அபாயத்தால் மக்கள் அவதி
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே சுந்தரம்பள்ளி காலனியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளைச் சுற்றி தேங்கியுள்ளது. விஷப்பூச்சிகள் நடமாட்டம் மற்றும் நோய்த்தொற்று பரவும் அபாயத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். கால்வாய் அடைப்பைச் சரிசெய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.