திருப்பத்தூர்: திருப்பத்தூரில் நான் முதல்வன் திட்டம்: பள்ளி மாணவர்களுக்கான 'உயர்வுக்குப் படி' நிகழ்ச்சி
திருப்பத்தூர் தனியார் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான 'உயர்வுக்குப் படி' நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.