பண்ருட்டி: சிறுவத்தூரில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு புனித நீர் மற்றும் 108 பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள சிறுவத்தூரில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் மயான கொள்ளை நடைபெறும். இந்நிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்கள் கெடிலம் நதிக்கு சென்று பால்குடம் மற்றும் புனித நீரை எடுத்து கொண்டு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பால் மற்றும் புனித நீரால் ஓம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சாகைவார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் மாலை அணிந்தும் விரதமிருந்தும் வேடமணிந்தும் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.