பண்ருட்டி: சொரத்தூர் மகா மாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து ₹2000, 2 கிராம் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள்
சொரத்தூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் இரவு பூஜை முடிந்து பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் வீட்டிற்கு சென்ற நிலையில் நள்ளிரவில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கோவில் கதவை உடைத்து, கோவிலில் இருந்த உண்டியல் காணிக்கை மற்றும் தங்க நகைகள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து இன்று தகவலறிந்து கோவில் நிர்வாகிகள் அங்கு சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.