பண்ருட்டி: சேமக்கோட்டை பகுதி செங்கல் சூளையில் தொழிலாளி காலுக்கு அடியில் இருந்த சுமார் 6 அடி நீளமுள்ள நல்லபாம்பு பத்திரமாக மீட்பு
சேமக்கோட்டை பகுதியில் செங்கல் சூளையில் கூலி ஆட்கள் இரவு வேலை செய்து கொண்டிருந்தபோது தொழிலாளி புஷ்பராஜ் என்பவரது காலுக்கு அடியில் 6 அடி நீளமுள்ள பெரிய நல்லபாம்பு இருந்ததை கண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். அப்போது நெல்லிக்குப்பத்தில் பாம்பு பிடி வீரர் உமர் அலி என்பவருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்து ஒளிந்திருந்த 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்தார். பின்னர் மீட்கப்பட்ட பாம்பு காப்புகாட்டில் விடுவிக்கப்பட்டது.