பண்ருட்டி: தோட்டப்பட்டு அருகே செங்கற்களுக்கு இடையில் இருந்த 3 அடி நீளமுள்ள நல்லபாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த தோட்டப்பட்டு பகுதியில் வீட்டின் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்துள்ளது.அப்போது அங்கு பணி செய்த வேலை ஆள் செங்கற்களை எடுத்துக் கொண்டிருந்த போது பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறி அடித்து ஓடினார் . பின்னர் இது குறித்து பாம்பு பிடி வீரர் கிருபாகரனுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் விரைந்து சென்ற அவர் 3அடி நீளம் உள்ள நல்ல பாம்பினை லாவகமாக பிடித்துச் சென்று காப்பு காட்டிற்குள் விடுவித்தார்.