பண்ருட்டி: தொரப்பாடி ஸ்ரீ குமர கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தொரப்பாடியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ குமரகோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15ஆம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. சிவ வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக திருத்தேரோட்டம் நடைபெற்றது. திருத்தேரில் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சண்முகநாத சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.