பண்ருட்டி: "தமிழக முதல்வர் கை காட்டுபவர் தான் பிரதமர்" - காடாம்புலியூரில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் கணேசன் பேச்சு
கடலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட காடாம்புலியூர் தனியார் திருமண மண்டபத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பங்கேற்றார். அப்போது பேசி அவர், கடலூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளரான எம்.கே.விஷ்ணு பிரசாத் ஆரணியில் சாலை, மேம்பாலம், மருத்துவமனை என தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை செய்தவர் எனவும், கடலூர் தொகுதியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம் என கூறினார்.