பண்ருட்டி: நெல்லிக்குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் அறிமுக கூட்டம்
நெல்லிக்குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் இந்தியா கூட்டணி சார்பில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாந்த் அறிமுக கூட்டம் திமுக நகரச் செயலாளர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.