பண்ருட்டி: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வட்டாச்சியர் அலுவலகத்தில் இருந்து பேரணி, துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது
ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பண்ருட்டியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, பண்ருட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை விழிப்புணர்வு பேரணி மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் வழங்கினர்.