பண்ருட்டி: நிர்வாக திறனற்ற முதல்வர் தன்னைத்தானே சிறந்த முதல்வர் என கூறிக் கொள்கிறார் - காடாம்புலியூரில் எம்பி.சிவி.சண்முகம் பேச்சு
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடம்புலியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும்,எம்பியுமான சி.வி. சண்முகம் தே.மு.தி.க துணை பொதுச்செயலாளர் எல்.கே சதீஷ் உள்ளிட்ட இரு கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.