பண்ருட்டி: வாழப்பட்டு பகுதியில் தண்ணீர் குழாயின் அருகில் இருந்த சுமார் 5 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு பகுதியில் ராஜா என்பவர் வீட்டின் அருகில் உள்ள தண்ணீர் குழாயில் பாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு அவரது மனைவி அதிர்ச்சி அடைந்து அலறி அடித்துக் கொண்டு ஓடினார் பின்னர் இது குறித்து நெல்லிக்குப்பத்தில் பாம்பு பிடி வீரருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் விரைந்து சென்ற அவர், 5 அடி நீளம் உள்ள நல்ல பாம்பினை லாவகமாக பிடித்து காப்பு காட்டிற்குள் விட்டார்