நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் ஆடு திருடிய கும்பல் கைது: 13 ஆடுகள் மற்றும் வாகனங்கள் பறிமுதல்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்ட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 13 ஆடுகள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.