பழனி: பழனி ரோப்கார் சேவை ரத்து: நவம்பர் 5 வரை ஆன்லைன் முன்பதிவு நிறுத்தம்!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரோப்கார் கியர் பாக்ஸ் கோளாறால் நவம்பர் 5 வரை சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் மின் இழுவை ரயில் அல்லது மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.